இங்கேயே நின்று விடுகிறேனே ?
நடுநிசியில்
அடர்ந்த காட்டுக்குள்
விரட்டப்பட்டவனின் மனமென
பயம் ஆட்கொள்கிறது.
தோற்றுப் போன
மாவீரன் ஒருவனின்
கொடுஞ்சினமென பாய்கிறது
என்மீதான கோபம் .
இந்த கணம்
மரணமடைபவனின் இதயத்துடிப்பென
மிரள்கிறது
நம்பிக்கை தொலைத்து.
கோடையில்
சிறு பொழுதேனும்
பொழியும் மழையென
என்மீதான கருணை .
அடர்ந்து பறக்கும்
பறவைகளின்
சிறகு விசிறிவிட்ட
மென் காற்றென
திளைக்கிறது
மனது .
மஞ்சள் பூக்களை
உதிர்த்த மரம்
காதுக்குள் சொல்கிறது
இங்கேயே நின்றுவிடுதல்
உனக்குச் சாத்தியமற்றதென்று.
பெரிய சம்பவங்கள் (மீண்டும் தலைப்புச் செய்திகள்- நூல் பார்வை)
-
சன் டிவியில் முதன்மை செய்தி ஆசிரியராக பணியாற்றியவர் ராஜா வாசுதேவன். அதற்கும்
முன்பே பத்திரிக்கைகளிலும், சன் டி.வி.யுடன் கூடுதலாக சில தொலைக்காட்சிகளிலும...
1 month ago


7 comments:
எங்கெங்கோ சுற்றி வருகிறது உங்கள் கற்பனை. வாழ்த்துக்கள். பலமுறை படித்த பின்பு உள்ள கருது புரிகிறது. காட்டுக்குள் வந்ததில் மிகவும் வருத்தமா?
- venkatesh
//மஞ்சள் பூக்களை
உதிர்த்த மரம்
காதுக்குள் சொல்கிறது
இங்கேயே நின்றுவிடுதல்
உனக்குச் சாத்தியமற்றதென்று.//
ரசித்தேன்.
@ மண்குதிரை
வருகைக்கு மிக்க நன்றி .
Greetings from Norway...please continue your work...!
மிக்க நன்றி..
வாவ், ரொம்ப நல்லா இருக்கு.
அனுஜன்யா
@அனுஜன்யா
தங்களின் வருகைக்கும் , வாழ்த்துக்கும் மிக்க நன்றி
Post a Comment