மலையின் உச்சியில்
வழிந்த மேகம்
வேர்கள் நனைத்து
இலைகள் தழுவி
இடுக்குகளில் ஓடி
பிடிமானமற்று விழுகிறது
தாயின் உடலில்
சிதறிய நீரில்
குதுகலமாய் குளித்துக்கொண்டிருக்கிறாள்
சிறுமி
கம்பியை இறுகப்பற்றி
கண்கள் மூடி
தன்னுள் இட்டு நிரப்பிக்கொண்டிருக்கிறாள்
தலை வெளுத்தவள்
பிறகு
ஈர உடலோடு
பிராத்தனை செய்கிறாள்
தாய்க்கும்
பிள்ளைக்கும்
ஆசீர்வாதம் செய்கிறாள்
சோர்ந்து சிவந்த
கண்களில் வழிந்து கொண்டிருக்கிறது
அவளுள் நின்ற அருவி.
எழுத்தாளன் சும்மா முந்திரிக்கொட்டை பொறுக்குபவன்தான் - நேர்காணல்: கண்மணி
குணசேகரன்
-
கண்மணி குணசேகரன், தமிழின் தனித்துவமான நடுநாட்டு கதைசொல்லி. இவர் எழுதிய
‘அஞ்சலை’ தமிழ் கிளாசிக் நாவல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ‘நடுநாட்டுச்
சொல்லக...
6 days ago

