அழுது கொண்டே இருக்கிறது
குழந்தை..
தாய் இருந்தும்
தந்தை இருந்தும்
உடைத்து விளையாட
பொம்மைகள் இருந்தும் .
அழுது கொண்டே இருக்கிறது
குழந்தை..
பிறந்தது முதல்
கேட்டுக்கொண்டிருந்த
துப்பாக்கிகளின்
சப்தம் வேண்டி .
பெரிய சம்பவங்கள் (மீண்டும் தலைப்புச் செய்திகள்- நூல் பார்வை)
-
சன் டிவியில் முதன்மை செய்தி ஆசிரியராக பணியாற்றியவர் ராஜா வாசுதேவன். அதற்கும்
முன்பே பத்திரிக்கைகளிலும், சன் டி.வி.யுடன் கூடுதலாக சில தொலைக்காட்சிகளிலும...
1 month ago


2 comments:
ஏதோ வலி சொல்கிறது கவிதை; எனக்கு ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த ஒரு குடும்பத்தைக் கண் முன் நிறுத்துகிறது.
-ப்ரியமுடன்
சேரல்
இந்த கவிதை நான்கு வருடங்களுக்கு முன்னால் எழுதியது .
உங்கள் கண் முன் நின்றது சரிதான்.
ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த ஒரு குடும்பம் தான்
இந்தக் கவிதையை எழுதவைத்து.
அப்போது யுகமாயினி இதழில் வெளிவந்தது .
மிக்க நன்றி .
Post a Comment