எதையாவது
பாடிக்கொண்டே இருக்கிறது
பியானோ
எதையாவது
வாசித்துக்கொண்டே இருக்கிறது
புத்தக அலமாரி
தண்ணிர் வடிந்துகொண்டே இருக்கிறது
இறுகமூடிய பின்பும்
குளியலறை குழாயில்
எதையாவது விவாதித்துகொண்டே இருக்கிறது
வந்தவர்கள் விட்டுச்சென்ற
வார்த்தைகள்
தனிமைகள் அற்றது
அறை ...
முட்டாளின் உலகம்
-
முட்டாளாய் ஒருநாள் இருந்து பாருங்கள், சௌகரியங்கள் அதிகம், எதிர்பார்ப்புகள்
குறைவு, நீங்கள் எண்ணம்போல் தவறுகள் செய்யலாம், முட்டாள்களின் உலகம்
முன்னேற்பாடுக...
1 month ago
7 comments:
வெகு சிரத்தையான சிந்தனை! தொடருங்கள்!
-ப்ரியமுடன்
சேரல்
மிக்க நன்றி
-ப்ரியமுடன்,
பிரவின்ஸ்கா
ஆமாம் தனிமைகள் அற்றது அறை. அருமை, நல்ல பொருள்.
:-).. எதுவும் நிற்பதில்லை... எல்லாம் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கிறது...
மூன்றாவது பத்தியை இப்படி மாற்றலாமா?
தண்ணீர் வடித்து கொண்டே இருக்கிறது
இறுக மூடிய பின்பும்
குளியலறை குழாய்
@சுபஸ்ரீ இராகவன்
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
//தண்ணிர் வடிந்துகொண்டே இருக்கிறது
இறுகமூடிய பின்பும்
குளியலறை குழாயில்
எதையாவது விவாதித்துகொண்டே இருக்கிறது
வந்தவர்கள் விட்டுச்சென்ற
வார்த்தைகள் // மிக நுண்ணிய பார்வை.நல்ல கவிதை. வாழ்த்துக்கள்
@இராவணன்
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
Post a Comment