நேற்றைக்கு போல்
இருப்பதில்லை
இன்றைக்கு
அதிகாலை வானமும்
பள்ளிக்குச் செல்லும்
பிள்ளையின் முகமும்
வாசல் முருங்கை மரமும்
மாரியம்மன் ஆலயமும்
பூக்காரியும்
மல்லிகைப் பூக்களும்
அந்தக் கவிதையின் வரியும்
நானும்
அவர்களும்
எல்லோரும்
எல்லாமும்
உருவாக்குதலோ
உருமாற்றுதலோ
காலக்கடவுளின்
சாட்சியாக...
முட்டாளின் உலகம்
-
முட்டாளாய் ஒருநாள் இருந்து பாருங்கள், சௌகரியங்கள் அதிகம், எதிர்பார்ப்புகள்
குறைவு, நீங்கள் எண்ணம்போல் தவறுகள் செய்யலாம், முட்டாள்களின் உலகம்
முன்னேற்பாடுக...
1 month ago
No comments:
Post a Comment