பிணவாடை மூச்சுத் திணற
தாளிடப்படாத அறைக்குள்
புகுந்தேன் .
உத்தரத்தில்
தொங்கிக்கொண்டிருந்தான் அவன் .
இரத்தம் கசியும் உடலோடு
அலறிக் கொண்டிருந்தன
அன்றைக்கு அவன் பிரசவித்த வார்தைகள் .
கிழக்கு மூலையில்
வார்த்தைகளை புசித்துக் கொண்டிருந்தது
அந்தக் கருப்புப் பூனை .
மிஞ்சியவைகளை
மீன்தொட்டியில் கழுவினேன்
வாய்பிளந்து
இரத்தம் சுவைத்தது
மீன்கள்
ஒவ்வொன்றாக கோர்த்து
மலையாகினேன்
சடலத்துக்கு
கவிதை என்றார் ஒருவர்
கோழையின் அழுகுரல்
என்றார் மற்றொருவர்
பூக்களின் வாசம்
என்றார் ஒருவர்
பிணக்குவியலின் துர்வாடை
என்றார் மற்றொருவர்
இன்னிசை
என்றார் ஒருவர்
இரைச்சலின் ஊற்றுக்கண்
என்றார் மற்றொருவர்
கடவுளின் அன்பு வெளி
என்றார் ஒருவர்
சாத்தானின் பிரவாகம்
என்றார் மற்றொருவர்
ஞானியின் சித்தாந்தம்
என்றார் ஒருவர்
பைத்தியக்காரனின் உளறல்
என்றார் மற்றொருவர்
அகோராத்திரத்தில்
பிரபஞ்சமெங்கும்
நித்தியத்துவத்தின் மேல்
ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன
அந்த வார்த்தைகள்...
பெரிய சம்பவங்கள் (மீண்டும் தலைப்புச் செய்திகள்- நூல் பார்வை)
-
சன் டிவியில் முதன்மை செய்தி ஆசிரியராக பணியாற்றியவர் ராஜா வாசுதேவன். அதற்கும்
முன்பே பத்திரிக்கைகளிலும், சன் டி.வி.யுடன் கூடுதலாக சில தொலைக்காட்சிகளிலும...
1 month ago

