Sunday, June 21, 2009

நேரெதிர் பயணம்

சப்தமில்லாமல் ஆடிக்கொண்டிருக்கின்றன
இலைகள்

நிலவின் பாலொளி
சூழ்ந்திருக்கிறது

ஹார்மோன்களில்
மிதந்து கொண்டிருக்கிறது
மல்லிகை வாசனை

பட படத்துக் கொண்டிருக்கின்றன
இதயங்கள்

கண்களில் வழிந்த நீர்
கரைத்து விடுகிறது
இடைவெளியை

வேர்கள் அதிர
முத்தமிடுகிறார்கள்

கட்......கட்......கட்......
டேக் ஓகே
என்றான் சத்தமாக
தாடிவைத்த ஒருவன்

பிறகு
நேரெதிர் திசையில்
பயணிக்கிறார்கள்
இருவரும்.


10 comments:

யாத்ரா said...

அருமையான கவிதை பிரவின்ஸ்கா, ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க

//பிறகு
நேரெதிர் திசையில்
பயணிக்கிறார்கள்
இருவரும்//

:(

நந்தாகுமாரன் said...
This comment has been removed by the author.
நந்தாகுமாரன் said...

//

கட்......கட்......கட்......
டேக் ஓகே
என்றான் சத்தமாக
தாடிவைத்த ஒருவன்

//

இது அவசியமா ... தலைப்பிலேயே எனக்குப் புரிந்துவிடுவதால் ...

காமராஜ் said...

கவிதை மிக மிக அருமை

பிரவின்ஸ்கா said...

@ யாத்ரா
மிக்க நன்றி .

@Nundhaa
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
தலைப்பை மாற்றிவிட்டேன்.

@காமராஜ்
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

சிறப்பு தோழரே!

-ப்ரியமுடன்
சேரல்

Ashok D said...

நல்லாயிருக்குபா...

ஹார்மோன் கவனிக்க

பிரவின்ஸ்கா said...

@D.R Ashok
மாற்றிவிட்டேன்.
மிக்க நன்றி.

பிரவின்ஸ்கா said...

@சேரல்
மிக்க நன்றி.

இரசிகை said...

:))