வழக்கமாக வீட்டிற்கு வரும்
பேருந்து கடந்துவிட்டால்
பேருந்து நிறுத்தத்திலேயே
காத்துக்கிடப்பாள்
நான் வரும் வரை
கத்தரிக்காய் சுட்டு
பிசைந்து வைத்திருப்பாள்
எனக்கு பிடிக்குமென்று
மூக்குப்பொடி
வாசம் வீசும்
தன் மடியில் கிடத்தி
தூங்க வைப்பாள்
தெருவில்
யானையோ
சிங்கமோ
குரங்கோ
நிற்கிறதென
ஆச்சர்யமூட்டி
கண் விழிக்கச்செய்வாள்
யாருடைய கையிலும்
கடைசிவரை கிடைக்கவில்லை
பாட்டியின் சிவப்பு மூக்குத்தி
பத்திரமாக இருக்கிறது
என் மன அறையில்
ஒரு பொக்கிஷமாக.
முட்டாளின் உலகம்
-
முட்டாளாய் ஒருநாள் இருந்து பாருங்கள், சௌகரியங்கள் அதிகம், எதிர்பார்ப்புகள்
குறைவு, நீங்கள் எண்ணம்போல் தவறுகள் செய்யலாம், முட்டாள்களின் உலகம்
முன்னேற்பாடுக...
1 month ago
15 comments:
மென்மை! மிகவும் ரசித்தேன்.
-ப்ரியமுடன்
சேரல்
fine sir..
ரொம்ப நல்லா இருக்கு. எனக்கு நெருக்கமாக இருக்கிறது.
ரொம்ப எளிமையா சொல்லப்பட்ட நல்ல கவிதை. ஏக்கம் வரவைக்குது.
நல்லா இருக்குங்க.
@சேரல்
மிக்க நன்றி.
@Karthikeyan
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
@மண்குதிரை
மிக்க நன்றி.
@ச.முத்துவேல்
மிக்க நன்றி.
நிச்சயமாக நாம் அடுத்த இலக்கியக்கூடலில் சிந்திப்போம்.
@ஜ்யோவ்ராம் சுந்தர்
மிக்க நன்றி.
nice
@Nundhaa
மிக்க நன்றி.
நான் படிக்கும் உங்களின் முதல் கவிதை இது!.. முதல் அழகே முற்றிலும் அழகாம்..
ரொம்ப அழகாக இருக்குங்க. சேரல் சொன்னமாதிரி மென்மையாகவும்.. பேரன் கவிதைகள் நான் படிப்பதில் இதுவே முதலுமாகும்!!
வாழ்த்துகள்!
தங்களின் வருகையும், வாழ்த்தும் மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது.
மிக்க நன்றி
//யாருடைய கையிலும்
கடைசிவரை கிடைக்கவில்லை
பாட்டியின் சிவப்பு மூக்குத்தி
பத்திரமாக இருக்கிறது
என் மன அறையில்
ஒரு பொக்கிஷமாக. //
அழகான கவிதை :)
@ச.பிரேம்குமார்
மிக்க நன்றி
best wishes and continue ur good work
ரொம்ப அழகாக இருக்கு
intha appaththaa kavithai nallaayirukku:)
(en granma vai naan appaththaannu thaan solluven)
Post a Comment