Sunday, July 19, 2009

குறிப்புகளும் , அது சார்ந்தும்

காலையில்
பூட்டிவிட்டுத்தான்
சென்றிருந்தேன்.

பின்னிரவில் திரும்பியதும்
உட்புறமாக தாழிடப்பட்டிருந்தது.

கதவைத் தட்டினேன்

துல்லியமாக
எனது குரலிலேயே
யாரென்ற கேள்வி வந்தது

நடுக்கத்துடன்
நான்தான் என்றேன்


திறக்கப்பட்ட அறையின் சுவரில்
தற்கொலை பற்றிய
குறிப்புக்களை எழுதியிருந்தான்.

0

வழக்கத்தை விட
நீண்டிருக்கிறது இரவு

நிலவற்ற வானில்
பூச்சிகளென அலைந்து கொண்டிருக்கின்றன
நட்சத்திரங்கள்

மௌனித்திருக்கிறது
கடல்

எங்கும் வியாபித்திருக்கிறது
பிணநெடி

எல்லா நொடியிலும்
மரணம் நிகழ்த்தப்படுகிறது

தேவதையின் கழுத்தையறுத்தவன்
"இனி விடியப்போவதில்லை ?" என்றான்

கொலையை விட
மேலானது
தற்கொலை
என்றான் குறிப்பெழுதியவன்.

நன்றி- உயிரோசை

30 comments:

அகநாழிகை said...

பிரவின்ஸ்கா,
கவிதை அருமையாக இருக்கிறது.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

நந்தாகுமாரன் said...

மிக அபாரம். ரொம்ப பிடிச்சிருக்கு பிரவின்ஸ்கா. மனுஷ்யபுத்திரனின் பைத்தியக் கவிதைகள் அளவிற்கு அற்புதம்.

நந்தாகுமாரன் said...

Sorry ... please don't be offended with the comparison ... I shouldn't have done that ...

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

arumai piravinskaa!

-priyamudan
sEral

நளன் said...

Ubnormal :)

Vidhoosh said...

1. நீங்க போலன்னா போயிருப்பீங்க... நல்லவேளை, போயிட்டீங்க.:)

2. ஆமாம் ஆமாம் ஆமாம்.... அப்படியே கடைசியில் "தேவதையின் தலை சூரியனைப் பார்த்து புன்னைகைத்தது" அப்படீன்னு எழுதுங்க.

ஆமாமாமாமாம், என்ன கொஞ்ச நாளா தற்கொலைக் கவிதைகள்???

எல்லாம் நலம்தானே??

மண்குதிரை said...

romba nalla irukku nanbaree

கோகுலகிருஷ்ணன் கந்தசாமி said...

அருமையாக இருக்கிறது

நேசமித்ரன் said...

பிரவின்ஸ்கா..!
அற்புதம்
மனதுக்கு அணுக்கம் மிகுந்த சொற்கள்
கத்தியை கழுவி விட்டு கொலை செய்வது மாதிரி
தெளிந்த சொற்களால் தற்கொலை ..!]

நேசமித்ரன் said...
This comment has been removed by the author.
Venkatesh Kumaravel said...

கொஞ்சம் பயமாகவே இருக்கிறது.. ரொம்ப தனியாக இருக்கீங்க போல?

Ashok D said...

என்னப்பா வர வர உன் கவித ஒன்னும் புரியமாட்டங்குது...
பிரவி சீரிய கவி ஆகிவிட்டாரோ???

பிரவின்ஸ்கா said...

@ அகநாழிகை
மிக்க நன்றி .

@ Nundhaa

மிக்க நன்றி .
மனுஷ்யபுத்திரன் அவர்களை போல
ஒரு வரி என்னால் எழுதமுடியுமா ?
என்ன ?
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி .

@சேரல்
மிக்க நன்றி .

@நளன்
மிக்க நன்றி .

@ Vidhoosh

மிக்க நன்றி .
// எல்லாம் நலம்தானே?? //

நலம் .
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி .

@மண்குதிரை
மிக்க நன்றி .

@ நேசமித்ரன்
மிக்க நன்றி .

@வெங்கிராஜா
மிக்க நன்றி .

ஆமாங்க .
இன்று நண்பர்கள் வந்துவிட்டார்கள் .

@நேசமித்ரன்
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி.

@ D.R.Ashok
மிக்க நன்றி .
அப்படியெல்லாம் இல்லை.

பிரவின்ஸ்கா said...

@கோகுலகிருஷ்ணன் கந்தசாமி
மிக்க நன்றி

யாத்ரா said...

கவிதை மிகவும் பிடித்திருக்கிறது பிரவின்ஸ்கா

Vidhoosh said...

http://vidhoosh.blogspot.com/2009/07/blog-post_3187.html

please visit here. There is a small gift for you:)

-vidhya

பிரவின்ஸ்கா said...

@யாத்ரா
மிக்க நன்றி.

@Vidhoosh
உங்கள் அன்பிற்கும், விருதுக்கும் மிக்க நன்றி.

Karthikeyan G said...

Super!!!!

இரசிகை said...

nallaayirukku...

இரசிகை said...

nallaayirukku...

பிரவின்ஸ்கா said...

@ Karthikeyan G

மிக்க நன்றி.

@ இரசிகை
நிறைய கவிதைகளுக்கு பின்னூடம்
போட்டிருக்கிறீர்கள்.

மகிழ்ச்சி.


மிக்க நன்றி.

இரசிகை said...

en valaip pakkam vanthirukkeenga pola:)

thanks...

மதுசூதனன் said...

kavithai arumai

anujanya said...

பிரவின்ஸ்கா, (என்னய்யா, உம்பேர டைப் செய்யுறது பெரும்பாடா இருக்கு!)

அருமையான கவிதைகள். கொஞ்சம் பயமாவும் இருக்கு. தனியா இருக்கீங்களா?

அனுஜன்யா

ஆதவா said...

!!!!!
பிடித்திருக்கிறது!!!

பா.ராஜாராம் said...

அமானுஷ்யமான மனநிலை பிரவின்ஷ்கா...
வாசிப்பவர்களுக்கும்!...

பிரவின்ஸ்கா said...

@மதுசூதனன்
மிக்க நன்றி .

@ அனுஜன்யா
நிறைய கவிதைகளுக்கு பின்னூடம்
போட்டிருக்கிறீர்கள்.

மகிழ்ச்சி.

மிக்க நன்றி.

@ஆதவா
மிக்க நன்றி.

@பா.ராஜாராம்
மிக்க நன்றி.

Karthik said...

சிறப்பு.

--கார்த்திக்.

நிலாரசிகன் said...

அருமை நண்பரே :)

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

கொஞ்சம் மாஜுக் ரியலிசம்..!! நிறைய கவிதை மொழி..!!