Wednesday, July 8, 2009

அது - வாழ்வு .

முழுவதுமாய் புறக்கணித்துவிட்டது
தற்கொலை
புசித்து பசியாறி
மலம் கழித்துச் செல்கின்றன
மிருகங்கள்
கனவுகள் வந்தமர
கிளையேதுமில்லை
அநாமதேயமாய் கிடக்கின்றன
தீர்ந்த மதுப்புட்டிகள்
ஒளிந்துறங்க
வாசல் கடக்கையில்
மறைக்க அனுமதிக்கப்படுகின்றன
நிர்வாணம்
மாதவிடாய் பஞ்சோடு
வீசியெறியப்படுகின்றன
அதுவும், அது சார்ந்த
சகலமும்

நன்றி- உயிரோசை

13 comments:

யாத்ரா said...

இந்தக் கவிதையும் ரொம்ப பிடிச்சிருக்கு பிரவின்ஸ்கா.

பிரவின்ஸ்கா said...

@ யாத்ரா
மிக்க நன்றி

Admin said...

உங்கள் கவிதை அருமை....

வாழ்த்துக்கள்.... தொடர்ந்து எழுதுங்கள்..


நம்ம பக்கமும் வந்து பாருங்களேன்...

Anonymous said...

வெறுமையின் வெம்மை பொங்கும் சொற்கள்
கடுங்குளிரின் விறைப்பு
இரண்டும் இழையோடுகிறது

வாழ்த்துக்கள்

கோகுலகிருஷ்ணன் கந்தசாமி said...

///வாசல் கடக்கையில்
மறைக்க அனுமதிக்கப்படுகின்றன
நிர்வாணம்///

வார்த்தைகளை அழகாக கோர்த்திருக்கிறீர்கள்...நன்றாக இருக்கிறது...

நட்புடன் ஜமால் said...

வீசியெறியப்படுகின்றன
அதுவும், அது சார்ந்த
சகலமும் ]]


super ...

பிரவின்ஸ்கா said...

@ சந்ரு
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
தங்களின் அழைப்புக்கு நன்றி.
நிச்சயமாக.

@nesamithran
மிக்க நன்றி.

@கோகுலகிருஷ்ணன் கந்தசாமி
மிக்க நன்றி.

@நட்புடன் ஜமால்
மிக்க நன்றி.

Prem said...

sooper, azhuthamana karuthukku azhutham thiruthamaana vaarthaigal..virasagalinri..

Venkatesh Kumaravel said...

:D
bayangara veRumai-yA irukka nilamai?

பிரவின்ஸ்கா said...

@Prem
மிக்க நன்றி.
@வெங்கிராஜா
:) ...
மிக்க நன்றி.

பிரவின்ஸ்கா said...

@Nundhaa
மிக்க நன்றி

இரசிகை said...

yennennavo yezhuthureenga:)

anujanya said...

உயிரோசையில் படித்தேன். நல்லா வந்திருக்கு.

அனுஜன்யா