Monday, July 6, 2009

தடுப்பு

யாராவது முதுகில்
அடித்து விடுகிறார்கள்
பாய்ந்து சத்தமிட்டு
மிரண்டோடுகிறது பூனை
ஏதோ ஒன்று கடித்துவிட்டு
மறைந்து விடுகிறது .

நாயின் குரலில்
கதவில் மோதுகிறது
சாத்தான்
பாம்புகள் நெளிகின்றன
பிணம் தேடி அலைகின்றன
பறவைகள் சில
இறந்த மூளையை
புசித்துக் கொண்டிருக்கின்றன
புழுக்கள்

கைதவறி விழுந்துடைந்த
கண்ணாடித் தொட்டி மீனென
துடிக்கிறது இதயம்

தூக்கம் தடுக்கும்
மாத்திரையை
தேடியலைகிறேன்.

நன்றி- உயிரோசை

16 comments:

அ.மு.செய்யது said...

நல்லா எழுதியிருக்கீங்க..

வித்தியாசமான கற்பனை வரிகள்.

ச.முத்துவேல் said...

ரசித்தேன் பிரவின்ஸ்கா. நல்லாயிருக்கு.இப்படியும் ஒரு பிரச்னை.கவிதை கடைசியில் வீச்சு கொண்டிருக்கிறது.

Venkatesh Kumaravel said...

//கைதவறி விழுந்துடைந்த
கண்ணாடித் தொட்டி மீனென//
காட்சிகள் தெரிகின்றன! :D

கோகுலகிருஷ்ணன் கந்தசாமி said...

நன்றாக இருக்கிறது கவிதை...

அதிலும் அந்த தேடல் மிக நன்றாக இருக்கிறது...நல்லா தேடுங்க...

கிடைத்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா இருக்குங்க கவிதை.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நல்ல கவிதை பிரவின்ஸ்கா!

-ப்ரியமுடன்
சேரல்

ny said...

revealin!!

ny said...

relieving too..

பிரவின்ஸ்கா said...

@அ.மு.செய்யது
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

@ச.முத்துவேல்
மிக்க நன்றி
@வெங்கிராஜா
மிக்க நன்றி
@கோகுலகிருஷ்ணன் கந்தசாமி
மிக்க நன்றி.
நிச்சயமா.
@ஜ்யோவ்ராம் சுந்தர்
மிக்க நன்றி.
@சேரல்
மிக்க நன்றி.
@kartin
மிக்க நன்றி.

நேசமித்ரன் said...

அற்புதம்
நல்ல கவிதை
இழையோடும் தேடல்
தொற்றிக் கொள்கிறது

நந்தாகுமாரன் said...

நல்ல இருக்கு பிரவின்ஸ்கா ... ஆனால் இப்படியே போனால் அப்புறம் தூக்கம் கொடுக்கும் மாத்திரை தேடியலைவீர்கள் :) ...

பிரவின்ஸ்கா said...

@நேசமித்ரன்
மிக்க நன்றி.
@Nundhaa
மிக்க நன்றி.

பிரவின்ஸ்கா said...

@Nundhaa
:) ...

யாத்ரா said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு பிரவின்ஸ்கா

பிரவின்ஸ்கா said...

@யாத்ரா
மிக்க நன்றி

anujanya said...

இதுவும் உயிரோசையில் படித்தேன். நல்லா இருக்கு. கொஞ்சம் கவலையாவும் :(

அனுஜன்யா