மலையின் உச்சியில்
வழிந்த மேகம்
வேர்கள் நனைத்து
இலைகள் தழுவி
இடுக்குகளில் ஓடி
பிடிமானமற்று விழுகிறது
தாயின் உடலில்
சிதறிய நீரில்
குதுகலமாய் குளித்துக்கொண்டிருக்கிறாள்
சிறுமி
கம்பியை இறுகப்பற்றி
கண்கள் மூடி
தன்னுள் இட்டு நிரப்பிக்கொண்டிருக்கிறாள்
தலை வெளுத்தவள்
பிறகு
ஈர உடலோடு
பிராத்தனை செய்கிறாள்
தாய்க்கும்
பிள்ளைக்கும்
ஆசீர்வாதம் செய்கிறாள்
சோர்ந்து சிவந்த
கண்களில் வழிந்து கொண்டிருக்கிறது
அவளுள் நின்ற அருவி.
Whose Womb Is It Anyway?
-
டிஸ்கி: இது முற்றிலும் என் சொந்தக் கருத்துதான். ஈவெராவை நான் படித்ததில்லை,
அவரை எனக்கு பிடிக்காது என்பதால் இனியெப்போதும் படிக்கவும் மாட்டேன்.
ஈ.வெ.ராவுக...
4 days ago
11 comments:
நல்லா இருக்குங்க... காட்சி கண்முன்னே நிற்கிறது. சிலசமயம் ஆற்றில் குளித்துவிட்டு வீட்டுக்கு வரும்பொழுது, அலை அடித்தமாதிரியே உணர்வு ஏற்படுமே!!! இங்கே அப்படியில்லையென்றாலும், நல்ல கவிதை!!!
மிக அருமை பிரவின்ஸ்கா!
காட்சி கண்முன் விரியும்படி எழுதும் திறன் உங்களுக்கு இருக்கிறது. வாழ்த்துகள்!
-ப்ரியமுடன்
சேரல்
@ஆதவா
மிக்க நன்றி .
@ சேரல்
மிக்க நன்றி .
மிக அழகு
//சோர்ந்து சிவந்த
கண்களில் வழிந்து கொண்டிருக்கிறது
அவளுள் நின்ற அருவி //
அற்புதம் ... கவிதையின் visual imagery content எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது
ரொம்ப நல்லா வந்திருக்கு.வழிந்த மேகம்,பிடிமானமற்று விழுகிறது போன்ற வரிகள் கவனத்தை வெகுவாய் ஈர்த்து ரசிக்கவைக்கிறது. அனுபவிச்சு எழுதியிருக்கீங்க.
@இராவணன்
மிக்க நன்றி .
@Nundhaa
மிக்க நன்றி .
@ ச.முத்துவேல்
மிக்க நன்றி
அருமை. வலைப்பக்கத்தில் இணைப்புடன் போட்டிருக்கிறேன், ஏதும் பிரச்சனையா? வேண்டாமென்றால் எடுத்துவிடுகிறேன்.
@வெங்கிராஜா
அப்படி ஒன்றுமில்லை.
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி
ammaadi..
avalul nintra aruvi...-intha karppanai vizhi viriya vaikkirathu:)
ரொம்ப அழகான படிமம்.
அனுஜன்யா
Post a Comment