Tuesday, May 19, 2009

உள்வெளி

இருள் சூழ்ந்த
கூண்டொன்றில்
தனிமையில் அடைத்து வைக்கப்படுகிறாய்

உனது
அந்தரங்கங்கள் கூட
அறியப்படுகின்றன
அசைவுகளின் அதிர்வுகளில்

அசைவற்று
கிடந்த பொழுதுகளில்
உனது உயிர்ப்பை
உறுதிபடுத்துகிறது
உள்வெளியில்
சுனையென திறந்து வழியும்
திரவத்தின் சலனம் .

7 comments:

மண்குதிரை said...

ரசித்தேன். நல்லா இருக்கு பிரவின்ஸ்கா.

பிரவின்ஸ்கா said...

@மண்குதிரை
மிக்க நன்றி.

@Nundhaa
மிக்க நன்றி.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

கவிதை நன்று பிரவின்ஸ்கா!

//வெளி நதியில்
சிறகின் துடிப்பிசைத்து
எதிர் வரும் வண்டை
நான்
கண்டு கொண்டிருப்பது
எந்தப் பூவின் கனவோ.//

அட! என்ன அட்டகாசமான கவிதை! உங்களுக்கு மட்டும் எங்கிருந்து கிடைக்கிறது இதெல்லாம்?

-ப்ரியமுடன்
சேரல்

பிரவின்ஸ்கா said...

@சேரல்
மிக்க நன்றி.

// மெசியாவின் காயங்கள் - தேடல் //

கவிதையை
www.koodal.com மில் வாசித்தேன்.

ஆதவா said...

நான் கூட கண்ணீரோன்னு நினைச்சேன்.. சில சமயம் பாருங்க,

இறந்து கிடந்தவன் போல இருக்கும் அவன் உடல் விறைத்தே கிடக்கிறது.. மனம் மட்டும் உள்ளெங்கும் ஆடிக் கொண்டிருக்கிறது...

நீங்க சமீபத்திலதான் வலைக்கு வந்திருக்கீங்க போல...

பிரவின்ஸ்கா said...

ஆமாங்க. தங்களின் வருகைக்கும், பின்னுட்டத்திற்கும் மிக்க நன்றி

இரசிகை said...

puriyalaye...