Sunday, May 16, 2010

தேவனும் சக்கர நாற்காலியும்

சபானா உட்கார்ந்து கொள்ள
போதுமான இடம் இருக்கிறது
அந்தச் சக்கர நாற்காலியில் .

சோர்வில்லாமல்
அவளுக்கு
பூங்கா முழுவதும்
சுற்றிக் காட்ட முடிகிறது .

கடைவீதிகளில்
அவளுக்கு விருப்பமான
உடைகளையோ , பொருட்களையோ
வாங்கித்தர முடிகிறது .


சாபானவை கடற்கரைக்கு
அழைத்துச் செல்வதை மட்டும்
தவிர்த்து விடுகிறார்

வழி முழுவதும்
மனிதர்களின் காலடிச் சுவடுகள்
கிடக்குமென்பதால் .

நன்றி - உயிரோசை

Sunday, April 25, 2010

என்னை முன்வைத்து .

சமீபமாக காணமல்
போய்விட்டான் .


மறந்து வைத்த மூக்குக் கண்ணாடியை
தேடி எடுப்பது போல சுலபமானது
என்று தான் நினைத்திருந்தேன் .

ஆனால்
அது அப்படி இருக்கவில்லை.


தெரிந்தவர்களிடம்
சொல்லியும் வைத்தேன்.

தகவல் ஏதும் இல்லை.

வெயில் சற்று அதிகமாக இருந்த
கோடை நாளில்
இரயில் நிலையத்தில்
என்னைக் கண்ட
காக்கை
மரணம் நிகழாத
பகுதி ஒன்றில்
பிணம் தின்னும் பறவைகளுக்கு
இரையாக கிடப்பதாகச்
சொன்னது

தொலைக்கப்படுவதும்
மீட்டெடுப்பதுவும்
எப்போதும்
அத்தனை எளிமையானதாக இல்லை .

நன்றி - உயிரோசை