Tuesday, May 5, 2009

பூக்கள்

உதிர்ந்த
பூக்கள்தான் என்றாலும்
கால்வைக்க முடிவதில்லை.

0
எப்படியாவது
சேகரித்து விடுகிறது
பூக்கள்
மழையின்
ஒரு துளியை
என் தலையில்
தெளிக்க.

0௦

இத்தனை
கனமாக இல்லை
கிளைகளுக்கு
காய்ப்பதற்கு முன்.

11 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

மூன்றுமே அருமை தோழரே!

தொடருங்கள் உங்கள் கவிதைப் பயணத்தை.

-ப்ரியமுடன்
சேரல்

பிரவின்ஸ்கா said...

தங்களின் வாழ்த்து முகுந்த உற்சாகத்தைத் தருகிறது .
மிக்க நன்றி

மண்குதிரை said...

முதல் இரண்டும் அழகு.

மூன்றாவது புரியவில்லை நண்பரே. விளக்குங்கள்.

ச.முத்துவேல் said...

மூன்றுமே நல்லாயிருக்கு.
@மண்குதிரை

பூக்கள்
இத்தனை
கனமாக இல்லை
கிளைகளுக்கு
காய்ப்பதற்கு முன்.

இப்படிப் படிச்சுப் பாருங்க.

பிரவின்ஸ்கா said...

@ மண்குதிரை
மிக்க நன்றி.

@ ச.முத்துவேல்
தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.
கவிதையில் தாங்கள் செய்த மாற்றம் அழகாக இருக்கிறது.
மிக்க நன்றி.

@ மண்குதிரை

//இத்தனை
கனமாக இல்லை
மரத்தின் மனதுக்கு
காய்ப்பதற்கு முன்.//

இப்படிப் படிச்சுப் பாருங்க .

anujanya said...

ம், நல்லா வந்திருக்கு.

அனுஜன்யா

பிரவின்ஸ்கா said...

@அனுஜன்யா
மிக்க நன்றி.

Anonymous said...

hmm nalla irukkku Sha..moonrume pookalodu nillamal athodu palavatrai serthe unarthugirathu..

indha poovum thelikkattum enakkana mazhaiyai!!

-Prem

பிரவின்ஸ்கா said...

மிக்க நன்றி நண்பா.

ny said...

அச்சோ!! பேரழகு!!

பிரவின்ஸ்கா said...

@Kartin
மிக்க நன்றி.