Friday, May 22, 2009

என் கடலும் அவனும்.

இருவரும் தனித்தனியே
கடலை
உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தோம்

அவன் கடலில் நானும்
என் கடலில் அவனும்
மிதப்பதென்பது
சாத்தியமற்றது எப்போதும்

இந்த விதியை
உடைக்கும்
திராணியோ ,
அனுமதியோ ,
யாருக்கும் தரப்படவில்லை

என் கடலின்
ஓசையையும்
நிறங்களையும்
இட்டு நிரப்புகிறேன்
ஒரு ஊடகம் வழியே

நண்பா,
உன்னால் எப்படி சொல்ல முடிந்ததென்று
தெரியவில்லை
" இது உன் கடலின்
ஓசையும், நிறமும் இல்லை ?" என்று.

16 comments:

ரெஜோ said...

யாருக்கோ செய்தி சொல்வது போல் இருக்கிறதே இந்தக் கவிதை ;-)

கவிதை அருமை ...

ச.முத்துவேல் said...

நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

//அவன் கடலின் நானும்
என் கடலில் அவனும்
மிதப்தென்பது
சாத்தியமற்றது எப்போதும்
//

அருமை அருமை!

-ப்ரியமுடன்
சேரல்

மண்குதிரை said...

nalla irukku pravinskaa !

அகநாழிகை said...

கவிதை நன்றாக உள்ளது.

எனக்கொரு சந்தேகம்..
‘அவன் கடலின் நானும்‘

இது ‘அவன் கடலில் நானும்‘
என வாசிக்க வேண்டுமோ ?

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

பிரவின்ஸ்கா said...

@ ரெஜோ
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

@ச.முத்துவேல்
மிக்க நன்றி.

@சேரல்
மிக்க நன்றி.

@மண்குதிரை
மிக்க நன்றி.

@அகநாழிகை
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

"அவன் கடலில் நானும்"
மாற்றிவிட்டேன்.
மிக்க நன்றி.

ஆதவா said...

நல்லா இருக்குங்க.. (இதை மட்டுமே என்னால் சொல்ல முடிந்தது)

M.Rishan Shareef said...

கவிதை என் மனநிலையோடு ஒத்திருக்கிறது. பல நேரங்களில் இப்படித்தான் சாத்தியப்படாத வெளிகளிலேயே அவரவர் கடல்கள் அலை பாய்ந்துகொண்டிருக்கின்றன.
கவிதை அருமை.

பிரவின்ஸ்கா said...

@ஆதவா
மிக்க நன்றி.

@எம்.ரிஷான் ஷெரீப்
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

சுபஸ்ரீ இராகவன் said...

//இந்த விதியை
உடைக்கும்
திராணியோ ,
அனுமதியோ ,
யாருக்கும் தரப்படவில்லை//

உண்மை. மிகவும் ரசித்தேன்

//மிதப்தென்பது//
மிதப்பதென்பது

//நிறம்மும் இல்லை//
நிறமும் இல்லை

பிரவின்ஸ்கா said...

@சுபஸ்ரீ இராகவன்
தட்டச்சுப் பிழை. மாற்றிவிட்டேன்.
மிக்க நன்றி.

நந்தாகுமாரன் said...

கடைசி stanza அமைக்கப்பட்ட விதம் சற்றே உறுத்தலாக இருக்கிறது ஆனாலும் நன்றாக இருக்கிறது

பிரவின்ஸ்கா said...

@ Nundhaa
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

இது என் சங்கப்பலகை said...

ஒரு நெசவாளி நூலிழையில் செலுத்தும் கவனம்போல், இங்கு வார்த்தைகளின் அடுக்கில் அவ்வளவு நேர்த்தி..இயல்பு..

பிரவின்ஸ்கா said...

@இது என் சங்கப்பலகை
மிக்க நன்றி.

இரசிகை said...

viththiyaasama irukku...

purinthathu..