மேஜையின்
விளிம்பில் இருக்கிறது
முக்கோண வடிவிலானது
அதன்
பக்கங்கள் ஒரே அளவில்லானவை.
அறையில்
நிரம்பிய ஒளியை
தன்னுள் அனுமதிக்கிறது
உள்வாங்கி , கிரகித்து
வண்ணம் தருகிறது
அதனதன் குணங்களுக்கேற்ப
அறையின்
சுவர்களிள்
வர்ணஜாலம் காட்டுகிறது
ஒரு கலைப்படைப்பென
தன்னை சிருஷ்டித்துக்கொள்கிறது
பிறகு
பிரபஞ்சமெங்கும் வியாபிக்கிறது
நித்தியத்துவத்தின் ஒளியென.
Whose Womb Is It Anyway?
-
டிஸ்கி: இது முற்றிலும் என் சொந்தக் கருத்துதான். ஈவெராவை நான் படித்ததில்லை,
அவரை எனக்கு பிடிக்காது என்பதால் இனியெப்போதும் படிக்கவும் மாட்டேன்.
ஈ.வெ.ராவுக...
5 days ago
11 comments:
நன்று
-ப்ரியமுடன்
சேரல்
நல்லா இருக்கு
அனுஜன்யா
கவிதையின் prism அழகாகத் தான் இருக்கிறது ...
நல்லா இருக்கு பிரவின்ஸ்கா.
@சேரல்
மிக்க நன்றி
@அனுஜன்யா
தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.
@Nundhaa
மிக்க நன்றி
@மண்குதிரை
மிக்க நன்றி
அன்பின் பிரவின்ஸ்கா..,
நித்தியத்தின் ஒளி நெஞ்சில் நிறைகிறது.உடம்போடு ஒட்ட தைத்த மிக சரியான அளவு சட்டையை போலவும்,தாராளமாய் வார்த்தைகளை சேர்த்து வைத்திருந்தும் திட்டமிட்டு செலவிடும் தீவிரம் தெரிகிறது..வார்த்தைகளில்.
அழகாய் இருக்கிறது கவிதை :)
@ இது என் சங்கப்பலகை
தங்களின் வாழ்த்து மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது .
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
@ ச.பிரேம்குமார்
தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.
"பிறகு
பிரபஞ்சமெங்கும் வியாபிக்கிறது
நித்தியத்துவத்தின் ஒளியென"
araikkul sirushtikkapatta oli, prabanjam muzhuthum neelvathu eppadi? nithiyamaai viyabippathu eppadi? indha paguthi puriyala :(
-Prem
nalam..
Post a Comment