Thursday, May 7, 2009

இந்த மனதிற்காக

எதிலும்
இருப்புக் கொள்ளாமல்
அலைந்து கொண்டிருக்கிறது
மனது

அவசியமின்றி
மூச்சுக்காற்றில் நிறைந்திருக்கிறது
கோபம்

தன்னை எதிர்க்காத
ஒருவனை
சளைக்காமல்
தாக்கிக் கொண்டிருக்கிறான்
சிறுவன் ஒருவன்
கணிப்பொறி விளையாட்டொன்றில்

நானும்
சிருஷ்டிக்கத் துவங்குகிறேன்
இப்பொழுது
எனக்கான ஒருவனை
இந்த மனதிற்காக.

14 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

//தன்னை எதிர்க்காத
ஒருவனை
சளைக்காமல்
தாக்கிக் கொண்டிருக்கிறான்
சிறுவன் ஒருவன்
கணிப்பொறி விளையாட்டொன்றில்

நானும்
சிருஷ்டிக்கத் துவங்குகிறேன்
இப்பொழுது
எனக்கான ஒருவனை
இந்த மனதிற்காக.
//

மனித மனத்தின் வன்மம் சொல்லும் வரிகள் நண்பரே!

-ப்ரியமுடன்
சேரல்

மண்குதிரை said...

எப்பவாது எனக்கும் இப்படித் தோன்றுவதுண்டு.

ப்ரவின்ஸ்கா, ரசித்தேன்.

நந்தாகுமாரன் said...

முதல் para தேவையில்லை என்று தோன்றுகிறது ... உனக்குத் தேவையில்லை என்றால் விட்டுவிடு எனச் சொல்லாமல் ஏன் என்று பரிசீலிப்பீர்கள் என்று நம்புகிறேன் ... :)

ச.முத்துவேல் said...

பிடிச்சுருக்குது.

பிரவின்ஸ்கா said...

@ சேரல்
மிக்க நன்றி.

@மண்குதிரை
மிக்க நன்றி.

@ நுந்தா
தங்களின் வருகைக்கு,கருத்துக்கும் மிக்க நன்றி.


@ ச.முத்துவேல்
மிக்க நன்றி.

பிரவின்ஸ்கா said...

@ Nundhaa
இப்பொழுது பாருங்கள்.

நந்தாகுமாரன் said...

என் கருத்துக்கு மதிப்பளித்தற்கு நன்றி ... :)

மண்குதிரை said...

நந்தா சொன்ன மாற்றம் நல்லா இருக்கு ப்ரவின்ஸ்கா.

anujanya said...

வாவ், ரொம்ப நல்லா இருக்கு

(உங்கள எப்படி கூப்பிட? நண்பர்கள் எப்படி அழைக்கிறார்கள்?)

அனுஜன்யா

பிரவின்ஸ்கா said...

@அனுஜன்யா
நண்பர்கள் "பிரவின்ஸ்கா" என்று அழைக்கிறார்கள்
தங்களுக்கு பிடித்திருந்தால் அப்படியே அழைக்கலாம்.
தங்களின் வருகைக்கும் , வாழ்த்துக்கும் மிக்க நன்றி

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாய் உங்களுடைய பல கவிதைகளைப் படித்தபடி இருக்கிறேன். மனதிற்குப் பிடித்தமானதாய் இருக்கிறது கவிதைகள்.

பிரவின்ஸ்கா said...

@ ஜ்யோவ்ராம் சுந்தர்

தங்களின் வருகையும், வாழ்த்தும் மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது.

மிக்க நன்றி .

இராவணன் said...

மற்றுமொரு மிக நல்ல கவிதை.
வாழ்த்துகள் பிரவின்ஸ்கா.

பிரவின்ஸ்கா said...

@இராவணன்
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.