Friday, June 12, 2009

உற்றுநோக்கிய பொழுது.

இரவில் பசித்த பூனையென
சத்தம் போடுகிறது

பழுத்து விழுந்த
இலையோடு காற்றில்
நடனமாடுகிறது

தவழும் குழந்தையோடு
மழலை நேசம் கொள்கிறது

முகத்தில் அப்பிய
துப்பட்டாவை இழுத்துச் சென்றவளோடு
தேநீர் அருந்துகிறது

அடர்ந்த இருளில்
ஜொலித்துக் கொண்டிருந்த
நெருப்பில்
விழுந்த வவ்வாலென
துடிக்கிறது

அடுத்த நிகழ்வுக்கான
அவதானிப்பு ஏதுமில்லை

சிவப்பிலிருந்து பச்சைக்கு
மாறுகிறது விளக்கு

மிக அருகில் கேட்கிறது
செல்லவேண்டிய
இரயிலின் சத்தம்.

14 comments:

இராவணன் said...

//இரவில் பசித்த பூணையென
சத்தம் போடுகிறது

பழுத்து விழுந்த
இலையோடு காற்றில்
நடனமாடுகிறது

தவழும் குழந்தையோடு
மழலை நேசம் கொள்கிறது

முகத்தில் அப்பிய
துப்பட்டாவை இழுத்துச் சென்றவளோடு
தேநீர் அருந்துகிறது

அடர்ந்த இருளில்
ஜொலித்துக் கொண்டிருந்த
நெருப்பில்
விழுந்த வவ்வாலென
துடிக்கிறது

அடுத்த நிகழ்வுக்கான
அவதானிப்பு ஏதுமில்லை

சிவப்பிலிருந்து பச்சைக்கு
மாறுகிறது விளக்கு

மிக அருகில் கேட்கிறது
செல்லவேண்டிய
இரயிலின் சத்தம்.//


ஒவ்வொரு வரியும்
உணருகிறேன்

ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு பிரவிண்ஸிகா.

அதுவும் நான் இப்ப இருக்கிற மனநிலையில தெளிவா எழுதமுடியாம தவிச்சிகிட்டிருக்கேன்.
நீங்க மிக கூர்மைய பதிவு பண்ணியிருக்கீங்க

ஆ.சுதா said...

'படிக்க வேண்டியக் கவிதை என் விழியோரம் காற்றில் படபடக்கின்றன'

உங்கள் கவிதையை முதன் முதலா படிக்கின்றேன். ரொம்ப அழகாக உள்ளது கவிதை.

யாத்ரா said...

அருமை பிரவின்ஸ்கா

நந்தாகுமாரன் said...

very good observation

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

ரசித்தேன்

-ப்ரியமுடன்
சேரல்

பிரவின்ஸ்கா said...

@ இராவணன்
மிக்க நன்றி.

@ஆ.முத்துராமலிங்கம்
மிக்க நன்றி.

@yathra
மிக்க நன்றி.

@Nundhaa
மிக்க நன்றி.

@சேரல்
மிக்க நன்றி.

நேசமித்ரன் said...

கவிதை மிக அருமை
ஒரு சின்ன விண்ணப்பம்
பூனை - பூணை ஆகி இருக்கிறது
மாற்றவும் ...

பிரவின்ஸ்கா said...

@நேசமித்ரன்
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
தட்டச்சுப் பிழை. மாற்றிவிட்டேன்.
மிக்க நன்றி.

மதன் said...

கவிதை எனக்கு மிகவும் பிடித்தது.. அறிமுகத்திற்கு மகிழ்கிறேன்..!

பிரவின்ஸ்கா said...

@மதன்
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா இருக்குங்க கவிதை.

பிரவின்ஸ்கா said...

@ஜ்யோவ்ராம் சுந்தர்
மிக்க நன்றி.

இரசிகை said...

remba nallayerukku:)

anujanya said...

ஆஹா, மிக அழகிய கவிதை.

அனுஜன்யா