திடீரென அடர்ந்த
இருளுக்குள் தள்ளிவிடப்படுகிறேன்.
மூச்சுத்திணற
அந்த குகைக்குள்ளிருந்து
வேகமாக வெளியேறுகிறேன்
எனக்காக
காத்திருந்த பாவனையில்
நின்ற எருமை
துரத்த ஆரம்பிக்கிறது
இறந்துபோன மூதாதையர்கள்
எனக்காக
பிரார்த்தனை செய்கிறார்கள்
முப்பாட்டியின்
சமாதியில் நிற்கும்
ஆலமரத்தின் விழுதொன்றால்
இறுக கட்டிவைக்கிறேன்
அந்த எருமையை
கதிரவன் மேனிதழுவ
துயிலெழுகிறேன்
கண்களை அகலவிரித்து
பெருமூச்சு விடுகிறேன்
கனத்து துடித்துக்கொண்டிருக்கிறது
இதயம்.
Whose Womb Is It Anyway?
-
டிஸ்கி: இது முற்றிலும் என் சொந்தக் கருத்துதான். ஈவெராவை நான் படித்ததில்லை,
அவரை எனக்கு பிடிக்காது என்பதால் இனியெப்போதும் படிக்கவும் மாட்டேன்.
ஈ.வெ.ராவுக...
1 day ago
16 comments:
இந்த எருமை என் கனவிலும் வந்திருக்கிறது, கவிதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
இப்படித்தான் ஒருமுறை....
என்னை யாரோ குத்துவதற்கு வந்து கொண்டிருந்தார்கள்...
பளபளவென கத்தி.
நான் ஓடி ஒளிகிறேன். ஆனாலும் விடாமல் துரத்தி வந்து....
நான் வளர்க்கும் கோழியை அறுத்துவிடுகிறார்கள்.
அய்யோ என்று பதறிப் போய் கோழியைப் பார்க்கிறேன்.
அது உறங்கிக் கொண்டிருக்கிறது.
நள்ளிரவு 2 மணிக்கும் மேல்
எப்புடி???
கவிதை நல்லா இருக்குங்க.
நல்ல கனவு, நல்ல கவிதை பிரவின்ஸ்கா
-ப்ரியமுடன்
சேரல்
நல்லா இருக்குங்க.
அசத்தல் கவிதை
@yathra
மிக்க நன்றி
@ஆதவா
ரொம்ப நல்லாயிருக்கு .
மிக்க நன்றி
@சேரல்
மிக்க நன்றி
@ஜ்யோவ்ராம் சுந்தர்
மிக்க நன்றி .
@Nundhaa
மிக்க நன்றி .
enga voottu erumaya kalavaandukittu ponathu neethana!!!
-Prem
அருமையாக எழுதியுள்ளீர்கள் பிரவின்ஸ்கா. வாழ்த்துக்கள்.
Super.. the poem, and also Prem's Comment. :-)
@Prem
ஆமா ..மிக்க நன்றி நண்பா .
@உழவன்
தங்களின் வருகைக்கும், பின்னுட்டத்திற்கும் மிக்க நன்றி.
@ Karthikeyan G
மிக்க நன்றி
உங்கள் கவிதை படித்தேன் நன்று. இனி உங்களையும் தொடர்கின்றேன்.
@ ஆ.முத்துராமலிங்கம்
மிக்க நன்றி.
திடிரென,வெளியேருகிறேன்,பிராத்தனை
இந்த சொற்களை கவிஞர்
சரி பார்க்க வேண்டும்
மற்றபடி அருமையான கவிதை
@நேசமித்ரன்
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
தட்டச்சுப் பிழை. மாற்றிவிட்டேன்.
மிக்க நன்றி.
naan oru chinna diary yai nenjil kidathth vaiththa vaare thoongip ponen..
athu appadiye nakarnthu kazhuththai mutti nintrirukkirathu..
antha kutty nap il yenakku yen kazhuththai nerippathupol kanavu..
pada padappa muzhichen..
athu yen diary..
ithai yenakku yezhuthanumnu thonalai.. but,ungalukku(nadanthatho/nadakkalaiyo) yezhuthanumnu thoniyiru paarththeengala.. gud:)
athukkaagave vaazhththukkal!!
இன்னொரு அழகிய கனவுக் கவிதை.
அனுஜன்யா
Post a Comment