Tuesday, June 2, 2009

நம் வானில்.

உன்னோடு ஊடல்
கொண்ட பொழுதுகளில்
நிரம்பி வழிகிறது
வெறுமை

பூக்களின் பள்ளத்தாக்குகளை
நினைவு படுத்துகின்றன
பிரியத்தில் நீ
உதிர்த்த வார்த்தைகள்

அந்தரங்கங்களை
பேசிக்கொண்டிருந்த இரவுகளில்
தானாய் வழிகிறது
மேகம்

விடுமுறை நாட்களில்
வீடுவரும் பொழுதுகளில்
கருமேகமென திரண்டயென்னை
நிலமென உட்கொள்கிறாய்

பிறகு
வானவில்லின் நிறமுடுத்தி
மிதந்து கொண்டிருப்போம்
நம் வானில்.

12 comments:

நந்தாகுமாரன் said...

அழகான காட்சிகள் ... இயற்கையையும் காதலையும் இணத்து கொண்டாடும் சுகமே சுகம்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றாக இருக்கிறது கவிதை

-ப்ரியமுடன்
சேரல் .

நட்புடன் ஜமால் said...

\\அந்தரங்கங்களை
பேசிக்கொண்டிருந்த இரவுகளில்
தானாய் வழிகிறது
மேகம்\\

மோகம் வழியும் நேரத்தில் மேகமும் ...

நட்புடன் ஜமால் said...

\\வானவில்லின் நிறமுடுத்தி
மிதந்து கொண்டிருப்போம்
நம் வானில். \\

அழகு

பிரவின்ஸ்கா said...

@ Nundhaa
மிக்க நன்றி .

@ சேரல்
மிக்க நன்றி .

@நட்புடன் ஜமால்
தங்களின் வருகைக்கும், பின்னுட்டத்திற்கும் மிக்க நன்றி.

யாத்ரா said...

கவிதை மிகவும் பிடித்திருக்கிறது.

யப்பா இப்ப தான் நீங்க பின்னூட்டமிடும் முறையை மாற்றியிருக்கிறீர்கள், இதற்கு முன்பு இருந்த format ல் என்னுடைய சிஸ்டத்திலிருந்து பின்னூட்டமிட முடியாது. இதுவரை படிக்க மட்டுமே முடிந்து இப்போது தங்களோடு கருத்துகளையும் பகிர்ந்து கொள்ள முடிகிறது என்பதில் மகிழ்ச்சி.

பிரவின்ஸ்கா said...

@yathra
தங்களின் வருகைக்கும், பின்னுட்டத்திற்கும் மிக்க நன்றி.
அப்படியா ? எனக்கு தெரியாது நண்பரே.
தற்சயலாக மாற்றினேன்.
மகிழ்ச்சி.

பிரவின்ஸ்கா said...

@ yathra
இந்த format ல் சிரமம் இல்லை தானே ?

இராவணன் said...

நண்பரே இதை நோக்கவும்

http://gayatri8782.blogspot.com/2008/09/blog-post_29.html

:)))

பிரவின்ஸ்கா said...

@ இராவணன்
//பூக்களின் பள்ளத்தாக்குகளை //

அந்த கவிதையிலும் பார்தேன் .

பூக்களின் நறுமணம் என்று தான் முதலில் எழுதினேன் . பிறகு
நண்பன் ஒருவன் பள்ளத்தாக்குகள் பற்றி பேசிக்கொண்டிருந்தான்.
அதன் பிறகே "பூக்களின் பள்ளத்தாக்குகளை" என்று மாற்றினேன்.

இந்த கவிதையை நானும் வாசித்திருக்கிறேன் . அனால் எழுத்தும் போது நினைவில் இல்லை . தாங்கள் சொன்ன பிறகே நினைவுக்கு வருகிறது.

மிக்க நன்றி .

மதுசூதனன் said...

நன்றாக இருக்கிறது

இரசிகை said...

remba pidichchirukku...:)