Sunday, May 16, 2010

தேவனும் சக்கர நாற்காலியும்

சபானா உட்கார்ந்து கொள்ள
போதுமான இடம் இருக்கிறது
அந்தச் சக்கர நாற்காலியில் .

சோர்வில்லாமல்
அவளுக்கு
பூங்கா முழுவதும்
சுற்றிக் காட்ட முடிகிறது .

கடைவீதிகளில்
அவளுக்கு விருப்பமான
உடைகளையோ , பொருட்களையோ
வாங்கித்தர முடிகிறது .


சாபானவை கடற்கரைக்கு
அழைத்துச் செல்வதை மட்டும்
தவிர்த்து விடுகிறார்

வழி முழுவதும்
மனிதர்களின் காலடிச் சுவடுகள்
கிடக்குமென்பதால் .

நன்றி - உயிரோசை

18 comments:

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு பிரவின்ஸ்கா. :-(

நேசமித்ரன் said...

நல்லா இருக்குங்க பிரவின்ஸ்கா

இன்னும் கொஞ்சம் எடிட் பண்ணி இருக்கலாமோன்னு ஒரு எண்ணம்
கடை வரிகளில்
:)

இரசிகை said...

:(

vali....

இரசிகை said...

:(

vali....

"உழவன்" "Uzhavan" said...

ரொம்ப நல்லாருக்கு பிரவின்ஸ்கா.. உயிரோசையிலும் படித்தேன்.

ச.முத்துவேல் said...

very nice.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

என்னது? மனிதனின் காலடிகள் அத்தனை மட்டமா?

விநாயகதாசன் said...

அழகான‌ கற்பனை
நல்ல கவிதை

விநாயகதாசன் said...

அழகான‌ கற்பனை
நல்ல கவிதை

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Rajakamal said...

super

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அருமையான கற்பனை!

வாழ்த்துக்களுடன்,


ஆர்.ஆர்.ஆர்.

நித்யன் said...

Excellent

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கவிதை அருமை!!

Unknown said...

இயல்பு மாறா கவிதைகள் என்றும் மனதிற்கு இனியவை.

வாழ்த்துக்கள்,

பிரசன்னா சுப்பிரமணியன்
love-coffee-stories.blogspot.com

Sivakumar said...

தேவனின் பாதம் மண்ணில் விழாது என்று படித்திருக்கிறேன், காரணம் இன்று புரிந்தது.

மாலதி said...

கவிதை அருமை!!

Anonymous said...

good kavithai

thanks

Clear your Doubts