சமீபமாக காணமல்
போய்விட்டான் .
மறந்து வைத்த மூக்குக் கண்ணாடியை
தேடி எடுப்பது போல சுலபமானது
என்று தான் நினைத்திருந்தேன் .
ஆனால்
அது அப்படி இருக்கவில்லை.
தெரிந்தவர்களிடம்
சொல்லியும் வைத்தேன்.
தகவல் ஏதும் இல்லை.
வெயில் சற்று அதிகமாக இருந்த
கோடை நாளில்
இரயில் நிலையத்தில்
என்னைக் கண்ட
காக்கை
மரணம் நிகழாத
பகுதி ஒன்றில்
பிணம் தின்னும் பறவைகளுக்கு
இரையாக கிடப்பதாகச்
சொன்னது
தொலைக்கப்படுவதும்
மீட்டெடுப்பதுவும்
எப்போதும்
அத்தனை எளிமையானதாக இல்லை .
நன்றி - உயிரோசை
Whose Womb Is It Anyway?
-
டிஸ்கி: இது முற்றிலும் என் சொந்தக் கருத்துதான். ஈவெராவை நான் படித்ததில்லை,
அவரை எனக்கு பிடிக்காது என்பதால் இனியெப்போதும் படிக்கவும் மாட்டேன்.
ஈ.வெ.ராவுக...
3 days ago
9 comments:
//தொலைக்கப்படுவதும்
மீட்டெடுப்பதுவும்
எப்போதும்
அத்தனை எளிமையானதாக இல்லை//
நன்று
Welcome back :)
:)
இறுதி வரிகளில் மீண்டும் துவஙுகிறது
கவிதை :)
last line......class!
ரொம்ப நல்லாருக்கு பிரவின்ஸ்கா.
ரொம்ப நல்லா இருக்கு பிரவின்ஸ்கா, எவ்ளோ நாள் கழிச்சி இல்ல
வாங்க ஐயா....
வெகு நாளாச்சி....
நல்ல தேடல் :)
-ப்ரியமுடன்
சேரல்
நல்ல கவிதை பிரவின்ஸ்கா..
இங்கதான் இருக்கீங்களா? :-)
நல்லா இருக்கு. எங்க இருந்தீங்க இவ்வளவு நாட்களாக?
அனுஜன்யா
முன்னும் பின்னும் எதுவுமில்லாமல் (அறிவிற்குட்படாமல்) இடைப்பட்ட பகுதியில் ருசி (வாழ்க்கை) இருப்பதுபோல்....
தொலைக்கப்படுவதற்கும்
மீட்கப்படுவதற்கும்
இடையில் உள்ளத் தேடுதலே
எல்லாம்
Post a Comment