Sunday, September 6, 2009

சபிக்கும் கணங்கள்

தலைக்குள் புகுந்து
சவப்பெட்டிக்கு
ஆணியடித்துக் கொண்டிருந்தான்

கண்களில், நாசியில்
நீர்வழிய
அவ்வப்போது கண்திறந்து வழிபார்த்து
அவசரமாக அறைக்கு
விரைகிறேன்

கருவில் இருக்கும்
குழந்தையென
சுருண்டு தூங்கிக்கொண்டிருக்கிறது
ஒரு வெள்ளைப் பூணை
வாசல் படியில்

இப்பொழுது
சபிக்கத் தொடங்குகிறேன்
எல்லோரையும்
கடவுள் உட்பட.

16 comments:

பா.ராஜாராம் said...

//தலைக்குள் புகுந்து
சவபெட்டிக்கு
ஆணியட்டித்து கொண்டிருந்தான்//
//கண்களில்,நாசியில்
நீர்வழிய
அவ்வவப்போது கண் திறந்து வழிபார்த்து
அவசரமாக அறைக்கு
விரைகிறேன்//
பிறகு அந்த கடைசி பத்தி..
வலியை,வாசிப்பவர்களுக்கும்
பாய்சசுகிறீர்கள் பிரவின்ஸ்கா.
அழுத்தி நசுக்குகிறது வலி!

Vidhoosh said...

ஹூம்ம்ம் என்று பெருமூச்சு விட வைத்தீர்கள் பிரவின்ஸ்கா.

--வித்யா

கோகுலகிருஷ்ணன் கந்தசாமி said...

ஏன்யா...ஏன்...என்ன ஆச்சு உனக்கு....

ஒரு முடிவாத்தான் திரியிரிய...இருக்கட்டும்...

மண்குதிரை said...

kanama irukku

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நேத்து நல்லத்தானேய்யா இருந்தீங்க? இன்னைக்கு என்ன ஆச்சு?

-ப்ரியமுடன்
சேரல்

Ashok D said...

லேட்டா வந்தாலும் தடாலடியா வருவியாப்பா?

நல்லாயிருக்கு :)

நேசமித்ரன் said...

ம்ம்
ஒரே மெர்சலா இருக்குபா
ஆனா நல்லாத்தான் கீது...
கலாய்க்கிற அண்ணாத்தே
:)

"உழவன்" "Uzhavan" said...

நேத்து நல்லத்தானேய்யா இருந்தீங்க? இன்னைக்கு என்ன ஆச்சு?
இதத்தான் சேரல் நானும் சொல்றேன் :-)

Prem said...

vela jaasthiya iruntha ipdiyellam yosikka thonumo!!!

யாத்ரா said...

ரொம்ப நல்லா இருக்கு பிரவின்ஸ்கா

நந்தாகுமாரன் said...

did u mean .... screw every body ... yeah some times you feel like that ... :)

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

வாசிப்பனுபவத்தில் ஒரு பரிமாணம் கிடைக்கிறது எனினும் - கொஞ்சம் புரிதலுக்கும் சுலபமாக இருக்கலாம் என்ற கருத்தும் வருகிறது.

இரசிகை said...

vali.........

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

நட்பே, அழகு கவி வாழ்த்துக்கள்

Travel360Tv said...

wonderful blogs

from

http://chennaionlineads.com/FreeAds/index.php

nirmal said...

மிகவும் நன்ட்ரு