Saturday, May 17, 2014

தொலை தூர விடியல்

மீளவே முடியாத
வெளியொன்றிற்குள் 
துப்பாக்கிகளின் முனையில்
தள்ளப்படுகிறோம்

ஆயிரமாயிரம் கண்கள்
உன்னை மேய
சாலையோரம் நீ மலம்கழிகிறாய்
சாலையோரம் நீ குளிக்கிறாய்
சாலையோரம் நீ பாலுட்டுகிறாய்
பிச்சையெடுத்த உணவை உண்கிறாய்

வெளியெங்கும் நிரம்பித்தழும்புகிறது
அகோர சிரிப்பின் ஒலிகளும்
விஷமேறி பழுத்த கைகளும்

நீ ஒரு துர் ஆத்மாவாக
மாற எத்தனிக்கும் அந்த கணம்
பாலுக்கு அழும் குழந்தை
கண்விழிக்கச் செய்கிறது .

1 comment:

Anonymous said...

மனதில் வலியலைகளைக் கிளறும் அழகான கவிதை. வாழ்த்துகள், ப்ரவின்ஸ்கா.
-சக கவிஞன் ஏகாந்தன்