Tuesday, July 14, 2009

பற்றுதல்

நினைவு தெரிந்த
நாளிலிருந்து
நின்றிருக்கிறது

அப்பாவிடம் கேட்டிருக்கிறேன்
பாட்டியிடம் கேட்டிருக்கிறேன்
அவர்களுக்கும் அப்படியே

சொல்லிக்கொண்டிருக்கிறேன்
பூமியுடனான அதன்
நேசத்தை

"யாரும் தூக்குப்போட்டுக் கொண்டதில்லையா ?"
என்று கேட்டாள் மறுமுனையிலிருந்து

20 comments:

நேசமித்ரன் said...

அருமை
என்ன செய்வது ?அப்படியே படிந்து விட்டது அதன் பிம்பம் ....
நன்றாக இருக்கிறது...!

ny said...

என்னவென்று சொல்லாமலே எல்லாம் சொல்கிறது கவிதை!!

மதன் said...

வாழ்த்துக்கள்!

நந்தாகுமாரன் said...

பிடித்திருக்கிறது பிரவின்ஸ்கா

பிரவின்ஸ்கா said...

@நேசமித்ரன்
மிக்க நன்றி

@kartin
மிக்க நன்றி

@மதன்
மிக்க நன்றி

@Nundhaa
மிக்க நன்றி

Admin said...

உங்கள் கவிதைகள் பிடித்திருக்கிறது வாழ்த்துக்கள் தொடருங்கள்...

மண்குதிரை said...

பிடித்திருக்கிரது ப்ரவின்ஸ்கா

கோகுலகிருஷ்ணன் கந்தசாமி said...

கவிதை மிகவும் அருமை

M.Rishan Shareef said...

கவிதையின் பாடுபொருள் எதையோ சொல்கிறது. பல தடவைகள் படிக்கவைக்கிறீர்கள்.
நல்ல கவிதை..தொடருங்கள் நண்பரே !

பிரவின்ஸ்கா said...

@சந்ரு
மிக்க நன்றி.

@மண்குதிரை
மிக்க நன்றி.

@கோகுலகிருஷ்ணன் கந்தசாமி
மிக்க நன்றி.

@எம்.ரிஷான் ஷெரீப்
மிக்க நன்றி.

Karthikeyan G said...

பிடித்திருக்கிறது.. :-)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கொஞ்சம் திடுக்குன்னுதான் கவிதை முடிஞ்சுது :)

தேவன் மாயம் said...

சிறிதெனினும் சிறந்தது!!

Vidhoosh said...

கடைசியில் திக்கென்று தூக்கி போட்டது.
நிறைய பேசுகிறது இக்கவிதை.

பிரவின்ஸ்கா said...

@Karthikeyan G
மிக்க நன்றி

@ஜ்யோவ்ராம் சுந்தர்
மிக்க நன்றி


@தேவன் மாயம்
மிக்க நன்றி

@Vidhoosh
மிக்க நன்றி

"உழவன்" "Uzhavan" said...

உங்க எல்லா கவிதையுமே நல்லா இருக்கு. ஆனா நமக்குதான் புரிய மாட்டேங்குது :-)

பிரவின்ஸ்கா said...

@ உழவன்
மிக்க நன்றி .
// ஆனா நமக்குதான் புரிய மாட்டேங்குது //
இதை என்னுடைய ஒரு வகை தோல்வி
என்று சொல்லுவேன்.


@நேசமித்ரன்
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி.

இரசிகை said...

mudivu yethirpaarkkavillai..ippadi:)

anujanya said...

திடுக். நல்லா இருக்கு.

அனுஜன்யா

Li. said...

புளியமரமோ, வேப்பமரமோ என்று மட்டும் தெரிகிறது... :-)

கவிதைகள் மிக மிக அழுத்தமாகவும், அழகாகவும் இருக்கின்றன..
they all carry some sort of mysticism in them.. very nice!

அனால் எல்லாக் கவிதைகளும் (முக்கால்வாசி)
தற்கொலை பற்றி இருப்பது மனதை நெருடுகிறது..

வாழ்கை பற்றியும் இன்னும் எழுதலாமே..

தாழ்மையான கருத்து மட்டுமே ..