அடர்ந்து வளர்ந்திருக்கின்றன
மரங்களும் செடி கொடிகளும்
புல்வெளியெங்கும் பனித்துளி
சலனமற்றிருக்கிறது நீர்நிலை
பூக்களின் வாசம்
நிரம்பியிருக்கிறது காற்றில்
பெயர் தெரியாத பறவைகளின்
ஓசை இசையென
வியாபித்திருக்கிறது
இங்கு
முழு சுதந்திரம்
அளிக்கப்பட்டிருக்கிறது
மனமெங்கும் மகிழ்ச்சி
அடரிருளில்
காதைக் கிழிக்கும் இரைச்சலில்
இரண்டடி இடைவெளியில்
பாய்கிறது
எக்ஸ்பிரஸ் இரயில்
இரைச்சலில் சொல்லிக்கொண்டேன்
இடைவெளி
இல்லமலிருந்திருக்கலாமென்று.
Saturday, July 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
இசையும் இரைச்சலும் இடைவெளியும் பதிவும் அருமை
மனக்கண்முன்னே காட்சிகளை அழகாக விவரிக்கிறது வரிகள்.
அருமை
ஷெனாய் இசையின் ஈற்று போல துவங்கும்
கவிதை கைப்பிடித்து அழைத்து செல்லும் வெளி
அதற்கொரு கவிதை எழுத வேண்டும் ..! :)
அற்புதம் !
கவிதை அற்புதம் !
@Nundhaa
மிக்க நன்றி
@ ச.முத்துவேல்
மிக்க நன்றி
@நேசமித்ரன்
மிக்க நன்றி
@gokul
மிக்க நன்றி
ஒருவித அலைச்சலும் எரிச்சலும் வரிகளிலேயே தெரிகிறது. வாழ்த்துக்கள்.
நன்று!
இதற்கு முந்தைய கவிதைக்கு என் கருத்து - நீங்களுமா?
-ப்ரியமுடன்
சேரல்
தொடங்கும் வரிகளிலிருந்தே
தேடத் தொடங்கினேன்... இறுதியில் என்ன ஒளித்து வைத்திருப்பீர்களென்று..
marvellous finish!!
@வெங்கிராஜா
மிக்க நன்றி
@சேரல்
மிக்க நன்றி
@ kartin
மிக்க நன்றி
:)
நல்லா இருக்கு பிரவின்ஸ்கா.
@ D.R.Ashok
:)
மிக்க நன்றி
@ஜ்யோவ்ராம் சுந்தர்
மிக்க நன்றி
நல்ல கவிதை பிரவிண்ஸ்கா
@இராவணன்
மிக்க நன்றி
மனம் முழுதும் மகிழ்ச்சி வியாபித்திருக்கும் கணமொன்றில் அப்படியே இறந்துவிடும் விருப்பு தோன்றுமெனக்கும். கவிதையும் அதையே சொல்கிறதென எண்ணுகிறேன்.
நல்ல கவிதை !
@ எம்.ரிஷான் ஷெரீப்
ஆமாங்க
மிக்க நன்றி.
:) so nice.
சாரி, பிரவின்ஸ்கா
லேட்டா வரேன். நல்லா இருக்கு. ஏன் தற்கொலைப் பற்றிய கவிதைகள் அதிகமா இருக்கு?
அனுஜன்யா
Post a Comment